பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடித்தன முறைமை குடித்தன முறைமை படித்திட வேணும் குடும்பம் நடத்தவும் வேணும் - பெண்கள் குடும்பம் நடத்தவும் வேனும் கோழி கூவும் அதிகாலையிலெழுந்து கூட்டிப் பெருக்க வேணும் - பெண்கள் வீட்டை மெழுக வேணும். இடுப்பது வளைத்திட எழில்தரும் விதமாய்க் கோலம் போடோணும் - நன்றாகக் கோலம் போடோனும், படுக்கையறையும் அடுப்பங்கரையும் சோற்றுப் பானை சட்டி பாத்திர பண்டம் பத்தும் விளக்கோணும் - விளக்கிச் சுத்தம் செய்யோணும். குருணி நெல்லே உரலி லிட்டுக் குத்திப் புடைக் கோனும் உஸ்லே. உஸ்லே... குடங்குடமாத் தண்ணீரெ ஓடோடி எடுக்கனும் கொப்பரை அண்டா குண்டா நிறைய ரப்போனும். பரிவோடு கன்றையே பாலூட்ட வைக்கோணும் பசுவில் பத்திரமாகக் கறக்கணும் - பாலைப் பசுவில் பத்திரமாகக் கறக்கணும். பக்குவமாய்ச் சோறு வடிச்சு பருப்புச் சாம்பாரு வச்சு மிக்க சுவையான ஒரு கறியோடு - தாலி கட்டினவன் வேர்வை சிந்தக் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணந் துட்டுதனை வீண்செலவு புரியாமல் - பெண்கள் சிக்கனமாய் வாழ்க்கை செய்து பழகோணும். குடித்தன முறைமை படித்திட வேண்டும். குடும்பம் நடத்தவும் வேணும் - பெண்கள் குடும்பம் நடத்தவும் வேணும் - இதில் கூறும் வார்த்தைபோல் குணமாய்ப் பெண்கள் தெரிந்து நடக்க வேணும் - விபரம் புரிஞ்சு நடக்க வேணும். 105