பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்ல வெட்கம் ஆகும்! என்றுதான் திருந்துவதோ? நன்றிகெட்ட ஆடவருலகம் - இனி என்றுதான் திருந்துவதோ? தொன்றுதொட்டு வந்தமடமை சொல்ல வெட்கமாகுதையா கொடுமை கொடுமை! (என்றுதான்) ஆணாகவந்த சில அக்ரமப் பிசாசுகள் ஆசையினால் அறிவிழந்தே மானாபிமானம் விட்டு மாலாக்கிச் சூலாக்கி மங்கையரைப் பாழாக்கி நாணாமல் கைவிடுத்தார் நடுத்தெருவில் நடைப்பிணமாய் அலையவிட்டார் ஞாயந்தானா? (என்றுதான்) ஏனென்று கேட்கவோர் ஆளில்லை! என் செய்வோம் இறைவா! கச்சி ஏகம்பனே! வண்ணான் சொன்ன சொல் வகையெனவே - ராமன் மனைவியாம் சீதையை வனத்தில் விட்டான் பெண்ணாள் திரெளபதியைத் தருமன் பித்தனாய்ச் சூதினில் பணயம் வைத்தான் கண்ணாம் காதலியை ஒருத்தன் கடன் தீர்க்கக் காசிதனில் விலைக்கு விற்றான் ஒண்ணா ரெண்டா உபத்திரவம்? - இந்த உலகினில் தாய்க்குலம் பட்டதுன்பம்! (இனி என்றுதான்) - ரங்கோன்ராதா பெண்ணார் அமுது நான் என் கண்ணாலே பெண்ணாரமுதைக் கண்டேன் வாயால் உண்ணாமல் உள்ளம் நிறையக் கொண்டேன்; (இரு கண்ணாலே) பகுத் தறிவுள்ள நண்பர் ஒருவரை யடுத்தேன் உள் ளன்பாலே அழகு விருந்து கொடுத்தேன்; (உள்ளன்பாலே) விருந்துண்ண வந்தவரு விரும்பிய தென்ன கூறு விசயத்தே சொல்லிப்பிடு வேறென்ன சொன்னாரு? பார்க்கையிலே மணக்கு துன்னு தொட்டுத்தான் பார்த்தாரு (பாடல் நிறைவுரவில்லை) 111