பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது நடனக் கலை? பண்ணால் சொல்லும் பொருளைப் பாவ ராக தாளத் தோடு கண்ணால் காட்டும் கலையே நடனக் கலை (ப) முன்னோர் நூல்கள் பல மொழித்த படி உயர்ந்த வின்னே ராடுங் கலையே நடனக் கலை (ப) ஆடரங்க மேடை மற்ற அலங்கார மெல்லாம் - சிற்ப அளவில் அமைக்க வேண்டும் ஆட்டி வைக்கும் நற்புலவன் கூத்துவகை அத்தனையும் அறிந்தும் இருக்க வேண்டும் பாடலின் கருத்துணர்ந்து பதங்களைச் சீர் பிரித்துப் பாடகலும் பாட வேண்டும் பாடலிலும் ஆடலிலும் அழகிலுமே சிறந்த பாத்திரம் நின்றாட வேண்டும் யாழுடனே வேய்ங்குழல் குழைய வேண்டும் - இரண் டாசிரியரும் ஒருவராக வேண்டும் ஒழிசை மழையெனப் பொழிய வேண்டும் - இசை இன்ப வெள்ளந் தன்னிலே எல்லோரும் மிதக்க வேண்டும்! தாளமதும் தட்ட வேண்டும் - அதனொடு மத் தாளமதும் ஒட்ட வேண்டும் - நயத்துடனே - பக்க (தா) மேளம் முக்கிய மேளமாகும் பாடலிலும் ஆடலிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். (பண்பால்)

  1. 16