பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்புறம்மா! கரிகள் வந்தன நரிகள் வந்தன கரிகள் வந்தன நரிகள் வந்தன நடுநடுங்கவே காட்டெருமைக் கூட்டம் வந்தன கிடுகிடுங்கவே கரிய பன்றிகள் இடிக்க வந்தன கரடி மந்திகள் கடிக்க வந்தன கலைமான் முதல் வரையாடுகள் காணாமே இடம் பெயர்ந்தன கரிகள் வந்தன தரிகள் வந்தன; காலொடிஞ்சது வாலறுந்தது கழுத்தொடிஞ்சது - நல்ல - காலம் பிறந்தது! கலப்பை பிடிச்ச உழவர் மனசில் கவலை ஒழிஞ்சது - திரும்பக் - குதிரை பறந்தது; சல்சலோன்னு சவாரி வுட்டார் டக் டக் - ராஜா சல்சலோன்னு சவாரி வுட்டார் டக் டக் டக் டக் டக் அப்புறம்மா......... ? ராஜாவுக்குத் தாகம் எடுத்தது ஒரு தடாகத்தைப் பார்த்தாரு தண்ணீல கையை வச்சாரு வந்ததே - பூதம் - வந்ததே இந்தத் தடாகம் என் சொந்தமாகும் எங்கு வந்தாயென்று இட்டதே சாபம் இந்தத் தடாகம் என் சொந்தமாகும் எங்கு வந்தாயென்று இட்டதே சாபம் கந்துகம் கிளியாய்க் காவலன் சிலையாய் கல்லானது, இன்னும் சொல்லோனும்! கதை மிச்சம் சொல்லவா இன்னும் சொல்லவா? சொல்லம்மா...! வேட்டைக்குப் போன ராஜா வீட்டுக்கு சீக்கிரம் வரணுமின்னு ராணி கடவுளை வேண்டினா எப்படி? ஆதாரம் உனையே அலதினியாரே? ஆண்டவனே கடைக்கண்பார் - என்னை (ஆண்டவனே) 128