பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பதும் அறுபதும் ஆயிரத்தித் தொனாயிரத்தி அம்பது, அறுபது இந் நாடகம், ஆடும் எங்களை ஆதரிக்க வேணும்! அறிஞர் எல்லார்க்கும் வணக்கம்: ஆயிரம் பேருழைப்பை யொருத்தன் அதியாயமாகவே அபகரித்துச் சேர்த்து வைத்தது அம்பது - அந்த அறியாமை நீங்கி மக்கள் அவரவர் உழைப்பைக் கொண்டு ஆண்டு அனுபவிப்பது அறுபது கொண்ட மனைவி யிருக்கக்கூட ரெண்டு மூணைச் சேத்துக்கிட்டு கும்மாளம் கொட்டினது அம்பது - நல்ல குணசாலி யொருத்தி யோடு கூடிக் கொஞ்சிக் குலவி அன்பு குறையாமல் வாழ்கிறது அறுபது கல்லும் மணலுங் கலந்த அரிசி கருத்த ராகி, உளுத்த சோளம் கம்பைத் தின்னு வம்பு வந்தது அம்பது - ஊசி முல்லையரும்பு போல அரிசி மூட்டைக் கணக்கில் துக்கிப் போட்டு மூக்குவரைக்கும் சாப்பிடுவது அறுபது! பேவி ருக்குது கிணத்திலே பிசாசி ருக்குது மரத்திலே - என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தது அம்பது ஆயுங் கலைஞன் ஏட்டிலே அமைந்த நீதிப் பாட்டிலே அறிவிருக்குது படிச்சுக் கோங்குது அறுபது (ஒரா) (ஒரா) (ஒரா) (ஒரா)