பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுகம் பாவமா? பாரதச்சண்டெ பழங்கதை அண்ணே பாத்துக்கிட்டுப் பேசு - அதை நீ பாத்துக்கிட்டுப் பேசு! அதுக்கும் முன்னே அமளி உண்டு அறிஞ்சு நீயும் பேசு அண்ணே - அறிஞ்சு நீயும் பேசு! கல்லுயானை கரும்பைத் தின்ன கதை - நீ அறியாயோ தம்பி கதை நீ அறியாயோ? கடலுக்குள்ளே ஓடிடும் கப்பல் காணலாமே இப்போ - நீ காணலாமே இப்போ! பெண்ணும் மண்ணும் வேணும் இன்னு பேயாப் பறக்கல்லே - அப்போ பேயாப் பறக்கல்லே! எண்ணுன் னாலும் சரியாச் சொல்லனும் அப்பனாணை சொல்லு - அப்போ இல்லையா இந்த ஆசை சொல்லு போட்ட சண்டை கொஞ்சமா - நாட்டுக்காகப் போட்ட சண்டை கொஞ்சமா கேட்ட வரமும் கொஞ்சமா? - சாமியைக் கேட்டவரமும் கொஞ்சமா? பாட்டுப் பாடி பரமனைத் தேடி பக்திமானுங்க செய்த காரியம் - பாவி நீ அறியாய் - படு பாவி நீ அறியாய். அறிந்ததைச் சொன்னா ஆத்திரப்படுவே அண்ணே கிளறாதே - அதிகமா அண்ணே கிளறாதே! 146