பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்தியின் சொர்க்கம் விண்ணாட்டிலே - அது விண்ணாட்டிலே! விவசாயி காணும் சொர்க்கம் இந் நாட்டிலே! பரதேசியின் சொர்க்கம் தெரியாதது - மெய்ப் பாட்டாளியின் சொர்க்கம் உருவானது; சோம்பேறியின் சொர்க்கம் சுய காரியம் - நல்ல தொழிலாளியின் சொர்க்கம் பிறர் காரியம்; அங்கேயில்லை சொர்க்கம் இங்கே உண்டு! (எங்கே சொர்க்கம்) - சொர்க்க வாசல் பழமையில் மூடப் பழக்கம் ஒழிப்போம்! லாலி சுப லாலி - காதலர் - ஜாலி வெகு ஜாலி! வாலிப வயதும், அழகும் அறிவும் வளரும் கல்விப் பொருத்தம் - இந்தக் காலத்துக் கேற்ற சட்டப் பதிவு கல்யாணமே சீர்திருத்தம் ஆமா (லாலி) பணத்துக் காகவே குமரி கிழவனை மணந்தால் செய்வோம் கேலி - மிகப் பழமையில் மூடப் பழக்க வழக்கம் ஒழிப்பதுவே நம் ஜோலி ஓ.எஸ் (லாலி) அநாவசியமாய் யாருக்கும் உதவா ஆடம்பரம் கூடாது - பகுத் தறிவுக்குப் பொருந்தும் அவசிய மானதை அறிந்து விடலாகாது! ...வெரிகுட் (லாலி) ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதே நேசம் - இனி அதுதான் அப்டு டேட் பேஷன் - ஆல்ரைட் (ல்ாலி) - வேலைக்காரி 149