பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? ஆகும் நெறியெது? ஆகா நெறியெது? அறிந்து கொள்வீரே! நன்றாய்ப் புரிந்து கொள்வீரே! (ஆகும்) ஆஸ்தியைச் சேர்க்கும் சுய நல மார்க்கம் சாஸ்வதமா? இன்பம் ஏற்படுமா? பூமியில் (ஆஸ்தி) மக்கள் சமத்துவம் காட்டும் பொதுநல மார்க்கம் தான் சுகமா? துன்பந்தான் தருமா? - இதில் (ஆகும்) காணிக்கை வாங்கிக் கடமையை மறந்து காலங் கடப்பது அவசியமா? - அது கதிதரும் என்பது வாஸ்தவமா? காணரும் அன்பால் நாணயமாகக் கடமையைப் புரியெனல் அவசியமா? அதற்குடன் பட மறுப்பது அறிவீனமா? - இதில் (ஆகும்) சம்சாரம் விடுத்துச் சந்யாசம் அடுத்து தனிமையிலிருப்பது சாத்தியமா? - அது எளிதில்லை என்பதில் மனப்பயமா? சரி சமமாக இருவரும் வாழ்வது தகுமெனச் சொல்வதில் தரங் கெடுமா? - அதில் பகைமை கொண்டாலது பயன்படுமா? - இதில் (ஆகும்) அரசர் தம்மை உருப் போட்டு, அருமறையாளன் அருள் சீட்டு அறிவும் வலிவு மெலாங் கொடுக்க ஆமோ? அது அவசியமா? உலகு கண்டதோர் நாதன் - என்ற உண்மை அன்பதே மேவும் - இனிப் பெருமையாளர் சிலர் வைப்பதும் முறையிது என்பதும் அவசியமா? - இதில் (ஆகும்) - சொர்க்கவாசல் 150