பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானம் வளர்க்கப் போறேண்டி! விஞ்ஞானத்தை வளர்க்கப் போறண்டி - மேனாட்டாரை விருந்துக் கழைச்சுக் காட்டப் போறண்டி தஞ்சாவூரு ஏத்தம் எறச்சு தலைகீழாப் பாடம் படிச்சு பொஞ்சாதி புருஷன் இல்லாமெ புள்ளயும் குட்டியும் பொறக்குறாப்புல (விஞ்ஞானத்தை) விஞ்ஞானத்தை வளர்க்கப் போறண்டி! அஞ்ஞானத்தை அழிக்கப் போறண்டி! அடுத்த நாட்டுக் காரன் போல ஆளக்கொல்லாம ஊரப் பாழு பண்ணாம (விஞ்ஞானத்தை) அதுமட்டுமா...? புஞ்ச நெலத்துப் பருத்திச் செடியில் பொடவ ரவிக்க வேட்டி காய்க்கப் பஞ்சைக் கிழவன் தன்னை வாழப் பருவ மாக்கி நாட்டைக் காக்க (விஞ்ஞானத்தை) கைத் திறமையைக் காட்டப் போறண்டி - ஒரு கவியப் பாடிக் காத்து மழையும் காட்டப் போறண்டி! மாட்டு வண்டிக்குச் சூச்சத்த வச்சு ஏம், மாமியாருக்கு ஒட்டி ஒட்டிக் காட்டப் போறண்டி! அதுல ஒன்னையும் ஏத்திக்கிட்டுப் போகப் போறேண்டி! வீட்டுக் கென்ன செய்யப் போlங்க - அதையும் கொஞ்சம் விபரமாக விளக்கிப் போடுங்க... வீட்டுக்கா? . . . آf(طاريايي என்ன வேணும்? கேட்டுக்கோ 151