பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தன்மானத் தமிழ்க்கவிஞர்’ புலவர் ப. வீரப்பனார், பூவிளைவாடி எல்லார்க்கும் ஏற்றபடி இனிதாகப் பாட்டெழுதும் நல்லதொரு பாவலனார் நாவரசர் கவிராயர்! எதுகைநலம் மோனைநயம் இயைபுவளம் உவமையணி புதுமையெழில் பொங்கிவரப் பூங்கவிதை தரும்புலவர்! வழக்குமொழி வண்ணமொழி வட்டாரப் பேச்சுமொழி பழகுமொழி அழகுமொழி பாப்புனைந்த படைப்பாளி: சந்திப்பும் சிந்திப்பும் சந்தத்தில் வந்துவந்தே சிந்தைகுளிர் விந்தைமிளிர் சிந்துபள்ளு தந்தவள்ளல் இளங்கோவின் இலக்கியத்தில் இன்புற்றும் இன்புறுத்தும் களங்கண்டும் வளங்கொண்டும் கமழ்கவிதை ஈந்தசெம்மல்! குறட்பாவில் அருட்பாவில் குவிந்துள்ள கருத்துகளைத் திறத்தாலே திரைப்பாவால் திக்கெட்டும் பரப்பியவர் பாரதியின் குறிக்கோளைப் பாவேந்தர் கோட்பாட்டை பாரதிரக் கூறுதற்குப் பாட்டரங்கம் கூட்டியவர்: vii