பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானுடத்தின் பரிணாமம் மானிடன் ஆதியில் வானரம் படிப்படி மாறியதாக... வெளியாச்சி! - அது மன்பதை உலகில் டார்வின் மேதை மண்டையி லெழுந்த ஆராய்ச்சி! காணகந் தன்னில் விலங்கொடு விலங்காய்க் கற்குகைளிலே வசித்தானாம் - பல காயுங் கனியுங் கிழங்கும் ஊனொடு கண்டதை யெல்லாம் புசித்தானாம். ஆடைகள் அணிகள் ஏது மில்லாமல் அம்மணமாக அலைந்தானாம் - தன் அன்னைக்கும் மனைவிக்கும் வேற்றுமை தன்னை அறியா நிலையில் இருந்தானாம். ஜாடைகள் புரிந்தவன் ஒசைகள் பயின்றும் கோடுகள் வரைந்தும் பார்த்தானாம் - வளர் தாவர உரிகளை இலைகளை உடையாய்த் தைத்தும் இடையில் சேர்த்தானாம். இயல் பூதங்களின் செயலால் உயிர்கள் இறப்பதைக் கண்ணால் கண்டானாம் - அதில் ஏதோ சக்தி உள்ளே இருந்தே இயக்குவதாகக் கொண்டானாம் - அந்தப் பயத்தால் விளைந்த சக்தியை உணரும் பருவம் அடையா தலைந்தானாம் - பலப் பல நூறாண்டுகள் கழிந்தே அறிவுப் பாதையில் மெல்ல நுழைந்தானாம். கூட்டங் கூட்டமாய்க் குடிசைகள் அமைத்துக் கொண்டுங் குழுவை வளர்த்தானாம் கொஞ்சங் கொஞ்சமாய்க் கல்வியும் கலைகளும் குழுவுடன் உண்டாக்கிப் படித்தானாம் நாட்செல நாட்செல காண்பதற் கெல்லாம் நாமங்கள் தந்து குறித்தானாம் நால்வகை யாய்த்தன் மரபினை வகுத்து நாகரீகத்தை வளர்த்தானாம். 157