பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்படி வித்தைகள் சூது! மாயமாகிய ஜாலந்தனிலே வந்த மாது நானே - உடனே மாறும் எந்தன் உருவமாகுமே! ஆசையா லெனை யாரும் தொட்டால் அருவ மாகுந் தானே! - ஆனால் ஆடல் பாடல் எல்லாஞ் செய்குவேன்! (மாய) கண்மூடும் நேரம் மாங்காச் செடியும் காயும் கனியாம் உன்னாலே! காணும் நாழிகை மூணே முக்கால் ஆனால் மறையும் தன்னாலே! எண்ணிப் பாரு இதுவெல்லாம் பொய்யே எதுக்கும் உதவாதே.... (மாய) பில்லி சூனியம் செய்வார் தமக்குப் பெண்ஜாதி பிள்ளையுந் தங்காது; பித்தலாட்டமே ஆனது செப்படி வித்தைகள் எல்லாம் வெறும் சூது நல்ல காரியம் எதுவும் அதனால் நடைபெற முடியாதே... (மாய) தனிப்பாடல் குருமுறை கொண்டாடிவந்த கோவிந்த சாமிக்(கு) இருபது ரூபாய்கள் ஈதல் - தருமம் பகைத்தவரைப் பாலிக்கும் பண்புபா ராட்டும் நகைச்சுவை நாயகனே! நல்கு! (கோவிந்தசாமி என்பவருக்கு, ரூ. 20 தரச்சொல்லிக் கவிராயர் கலைவாணருக்கு எழுதிய சீட்டுக்கவி இது. ஆயிரக் கணக்கில் பையில் வைத்திருக்கும் கலைவாணரிடம் அப்போது 20 ரூபாயே இருந்தது. என்னிடம் இருபது ரூபாயே இருப்பதை எப்படியுணர்ந்தார் கவிராயர் என்று வியந்தாராம் கலைவாணர்.) 164