பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னச் சின்ன வீடு கட்டி...! சின்னச் சின்ன வீடு கட்டிச் சிங்கார வீடுகட்டி ஒண்ணாக ஆடினோம் முன்னாலே!! - நமது சொந்தம் இந்நாளில் போவதோ பொன்னாலே? - மண் வீட்டைக் கட்டியபோது மனக் கோட்டை கட்டிய வாழ்வு; - அறி வூட்டும் பெற்றோர் வார்த்தையினால் ஆகலாமோ தாழ்வு? கூட்டுறவு தேய்வதோ? பணத்தாலே - நமது சொந்தம் கூடாமல் போவதோ புவி மேலே? (சின்ன) தொன்று தொட்டு நேர்மையினால் வந்த நேசம் ஒன்று பட்டு வாழாமல் செய்வது மோசம்! நன்றி கெட்ட பேர்கள் செய்கையாலே - நமது சொந்தம் இன்று கெட்டுப் போவதோ பொருளாலே! (சின்ன) - மருமகள் உணர்வைப் பிரிக்க வழியுண்டோ? உண்மையான உறவுமுறை உணர்ந்திடாமலே உறவாடுதுபார் உள்ளமிரண்டும் பாசத்தினாலே உடலை இங்கு பிரிந்தபோதும் சூழ்ச்சியினாலே உணர்வைப் பிரிக்க வழியும் உண்டோ பூமியின் மேலே (தாயும்) அண்ணன் தம்பி அன்னையென்று அறிந்திடாமலே - அலை மோதி உள்ளம் துடிப்பதைப் பார்! பாசத்தினாலே உடலை இங்கு பிரிந்தபோதும் சூழ்ச்சியினாலே உணர்வைப் பிரிக்க வழியும் உண்டோ பூமியின் மேலே (தாயும்) அநீதியாலே அறுந்ததடா உறவு முன்னாலே - உயர் நீதியினால் விளைந்ததடா பிரிவு இந்நாளே! உடலை இங்கு பிரித்தபோதும் சூழ்ச்சியினாலே உணர்வைப் பிரிக்க வழியும் உண்டோ பூமியின் மேலே? (தாயும்) - நீதிபதி 171