பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்காட்டி பாடல்: தென்பழனி மலைமேல் வசிப்பவனே! திருப்பதி மலைமேல் இருப்பவனே! அன்பர்களை ஏமாற்றி ஆகாரம் தின்பவனே! அயோத்தி ராமர் அடி தாங்க வந்தவனெ! தென்னிலங்கை சென்றவனே தீயை வச்சவனே! சீதையெக் கண்டவனே! சிரஞ்சீவி யானவனே! கரணம் போட்ரா ராமா! கடலைத் தாண்ட்ரா ராமா! காவடி தூக்குடா ராமா கையெ நீட்டி ஐயா கிட்ட காசக் கேள்றா ராமா ராம ராம ராமாரே ராமாரே ராமா ராம ராம ராமாரே ராமாரே ராமா நல்ல வழியிலே நடப்பவனுக்கிது காலமில்லடா ராமா! நாகரீகமாய் வாழனுமின்னா நன்றி மறந்திடு ராமா உள்ளதைச் சொல்லி உதை வாங்காதே உன்னை மாத்திக்கோ ராமா! யோக்கியம் பாத்தாப் பாக்கியம் ஏது? யோசிச்சிப் பார்றா ராமா! பட்டப்பகலில் கொல்லைப்புறமாய எட்டித் தாவுடா ராமா! எட்டித்தாவி உச்சஸ்தானத்தில் ஒட்டிக் கொள்ளடா ராமா! ஒட்டிய ஸ்தானம் ஒடிஞ்சி விழுந்தா ஒட்டம் பிடிடா ராமா! ஒட்டம் பிடிச்சி குற்றாலத்தில் ஓய்வு கொள்ளடா ராமா! வெள்ளைச் சட்டைக்கிச் சாயம் போட்டு வேலைய்ைப் பார்றா ராமா வேலை முடிஞ்சாச் சலவைக்குப் போட்டு வெளுத்து வாங்கிக்கோ ராமா! 179