பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதி வெங்கடேசனே! திருப்பதி வெங்கடேசனே - ஒன்னே நம்பி இருக்கிறான் இந்தத் தாசனே! (திருப்பதி) அநுபல்லவி பொறுப்பான ஜனங்கள் இங்கே புண்ணியந் தேட வாராங்கோ புசிக்கவும் நாங்க கேட்டாப் போடா இன்னுட்டுப் போறாங்கோ (திருப்பதி) கண்ணிகள் கரட்டுக் கல்லுப் பாதை இருக்க சிமெண்டு ரோட்டெப் போட்டாங்க! காலாலேறச் செஞ்சாங்க! வரப்போக எல்லாருக்கும் வசதியாக்கி வச்சாங்க!.... வாங்கித் தின்னும் பிச்சைக்காரர் வவுத்தில் மண்ணெப் போட்டாங்க! (திருப்பதி) பொங்கல் புளியோதரை வடை லட்டு - சீடை பூந்தி தோசை அதிரசம் உப்பட்டு - எல்லாம் உன்பேராலே செஞ்சு படைச்சுப் பின்னே உனக்கு மில்லே! எனக்குமில்லே! - கேட்பதற்கு ஊருக்குள்ளே யாருமில்லையே?... கோவிந்தா... கோவிந்தா... (திருப்பதி) உள்ளது போதாதுன்னு உண்டியலில் பணத்தைப் போட்டு ஒசந்த பணம் வேண்டி வரத்தைக் கேக்கல்லே! - நாங்க ஒருசாணு வயித்துக்கான உணவே தவிர வேறே ஒண்ணுமே அதிகமாக நினைக்கலே பொருளைக் கேட்டா அடிக்க வாராங்கோ! பிச்சை எடுத்தா போலீஸ் வானில் புடிக்க வாராங்கோ! (திருப்பதி) 181