பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனாச்சிட்டு சிகினாப் பொட்டு: சீனாச்சிட்டு சிகினாப்பட்டு சின்ன ரயில் ஏறிக்கிட்டாச் செங்கல்பட்டு! சேத்துப்பட்டுக் காத்துப்பட்டு செவந்து வெடிச்சுதாம் ரோசாமொட்டு: ஐசா லங்கடி லட்டு பைசா வகலப் பொட்டு அம்மாவோட ஐயா போறார் வெளியே பொறப்பட்டு - ஹை (சீனா) அல்ட்டாப்பு சோக்குக்காரி பெரிய முத்தம்மா! அதுக்குமேலே டீக்குக்காரி சின்ன முத்தம்மா! - இந்த ரெண்டுபேருஞ் சேந்துக்கிட்டா ஒருத்தெம்பத்துமா - இல்லே கண்டகண்ட பக்கமெல்லாம் ஊரைச்சுத்துமா! - ஹை. (சீனாச் சிட்டு) ஜினுக்குத்தாங்கிடி ஜினுக்குத்தாங்கிடி ஜினுக்குத்தாங்கிடி ஜினுக்குத்தான்! சின்னப்பொண்ணு அம்மாக்கண்ணு சும்மாவந்தா எனக்குத்தான்!! (சீனா) - குறத்தி மகன் உழவன் முன்னாலே! ஒழவன் முன்னாலேதான் - இந்த ஒலகஞ் சுத்தணுமவன் பின்னாலேதான்! மழையெ நம்பி வாழ்வானுங்க - இந்த மனிதர்களை எதிர்பார்க்க மாட்டானுங்க! பயறு பச்செ தானியத்தைப் பக்குவமாக்கி - வீட்டிலே, பாதுகாத்து வெதச்சிடுவான் பருவங்கண்டு காட்டிலே, உயிர் வாழும் ஜனங்களுக்கு உணவுப்பொருளை நாட்டிலே, ஒண்ணுக்கு நூறாகத்தான் உண்டாக்குவான் பாட்டிலே! - பாட்டாளியின் வெற்றி 185