பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணத்தை வெச்சுட்டுக் கையைக்காட்டு: கைலாயங் குடகுமலை பொதியமாமலை - எங்க வட கந்தசாமி கோயில் கொண்ட கழுகுமாமலை - எங்கமலை! கலங்கொம்பு ஏலம் மலைப்பாம்புத் தோலு கஸ்துரி யிருக்குது யே அம்மே...! புலித்தோலிருக்கு நகமிருக்கு பல்லிருக்குது ஏ ஆயி...! வைகுண்ட கைலாச வழிகாட்டும் நோய் ரக்கை கண்ட செந்தூர மாத்திரை உண்டு! வாங்காமெ என் ஆளைப் பாக்குரெ மனம் வசமற்ற பெண்ணுக்கும் ஆணுக்கும் வசமாக்க வசிய மருந்துண்டு கொடுக்கிறேன். உங்க வருத்தங்கள் நீங்க நானிருக்குறே வாங்ங்கய்யா... வாங்கம்மா! காடயெறகு கானாங்கோழி காட்டு மயில் பீலி காசில்லாம ஒசி கேட்டா கடுக்கா கொடுப்பேன் வாங்க.... (le Guur) பொய்யே இல்லாமே கடந்து போனதுஞ் சொல்வேன் - குறி மெய்யாகத் தானே மேலே நடப்பதுஞ் சொல்வேன் - உங்க பைய்யே அவுத்து பணத்தை வெத்தலை பாக்கு மேலே வச்சுப்புட்டு - ஒ அய்யாமார்களே! எங்கிட்ட கையெக் காட்டுங்க பார்ப்போம்! (டீயோ) 188