பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருந்தோ மருந்து: காச்சல் குளிரு கண்ணுவலி காதுவலி காமநோய் நாநூத்து நாப்பத்தெட்டுக்கும் மருந்தோ... மருந்து மருதைமலை பொதிய மலை மருந்தோ மருந்து பிடிவாதம் ரோகம் வயித்துக் கடுப்பு மனோ வருத்தம் தீரவே. (மருதை) சொரி சிரங்கு பொறி கரப்பான் சுரங்கள் மேக சூலைக்கும் காமாலை கண்டமாலைக்கும் - முழு பைத்தியக்கார மூளைக்கும் மருந்தோ... மருந்து சஞ்சீவி மருந்தோ.. மருந்து! பாடாத குரலும் பாடக் குயிலுக் கழுத்து லேகியம்! ஆடாத காலும் ஆட மயிலுக் காலு சூரணம்,! வீடான வீட்டிலிருக்க வேணுமிந்த வேரு - இதை வெந்நீரில் உரைச்சுக் கொஞ்சம் வீங்கின பக்கம் தடவிப்பாரு! மருந்தோ... மருந்து சஞ்சீவி மருந்தோ... மருந்து கருத்த முடியும் வெளுக்கா திருக்க காக்காச் சிறகுத் தயிலமிது! காலம் போன் வாலிபம் திரும்பக் கருங்குரங்குக் கற்பமிது! பெருத்த உடம்பைக் குறைக்கும் மருந்து பேதிக்கும் சகல வியாதிக்கும் மருந்து பெண்ணுக்கும் இருக்குது ஆணுக்கும் இருக்குது பெரிய மனுசன் சிறுபுள்ளைக்கும் இருக்குது மருந்தோ.. மருந்து சஞ்சீவி மருந்தோ... மருந்து 197