பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமர வடிவேலன்! குன்றுதோ றாடிவரும் குமரவடிவேலன் குமரவடிவேலன் - எங்க குரவர்குலக் கடவுள் தனைக் கூப்பிடுவேனம்மே! கொல்லிமலை மீதில்மேவும் புள்ளிமயில் வாகன் - எங்க வள்ளி மணவாளன்! குறி முகத்தின் எதிரில் வந்து அருள்புரிவா ரம்மே ஒன்பது கம்பளம் நம்பி வணங்கிடும் ஜக்கம்மா - தேவி ஜக்கம்மா - தந்த ஊராளும் ராஜகுமாரி நீயம்மா! அன்பன் ஒருவன் அவனியின் மேலே ஆபத்தான நேரத்திலே அங்கம் தொட்டுக் காத்ததுண்டா அம்மே சொல்லு முன்னாலே இன்பம் காணப் போகிறாய் இனிமேலே தான் அவனாலே சரியா ? சரிதான்....! - உன்னைக் காக்கவே கருணையோடு வந்த காளை காண்பதற்கு ஏழை - இடையிலே மூர்க்கனொரு கோழை - முடிபோட்டு வம்பு செய்து ஏய்க்கிறான் ஆளை ஆளை ஏய்க்கிறவன் வாழ மாட்டான் - அந்த ஆணழகன் அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான்! அம்மைக்கினி மேலே அடிக்குது அதிர்ஷ்டம் ஆனாலும் கொஞ்சம் இருக்கிறது கஷ்டம்! உண்மையிது என் வாக்கிலே - வந்தது இம்மிகூட மாறாதம்மா. உண்டுமா...? அப்புறஞ் சொல்லு! ஆனைமலை மேலே, அணிலுக்குத்தான் கண்ணி வச்சே அணில் விழும் கண்ணியிலே, ஆனைவிழப் போகுதம்மா! சென்னிமலை மேலே, சிட்டுக்கு நீ கண்ணி வச்சே சிட்டு விழும் கண்ணியிலே, சிங்கம்விழப் போகுதம்மா! (குன்றுதோ) - மதுரை வீரன் 201