பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்ல நாணுது: நங்கை தூங்காமல் ஏங்குறாளே நாவாலேதான் சொல்ல நாணுது. (நங்கை) ····. சீரான கல்யாணப் பயித்தியம் ஒ. இது. (சீரான) தீருமா? தீராது யாராலும் செய்யாதீர் வயித்தியம் பாராதீர் வீணாக ஜோசியம் பார்மீது உன்னாசை வேறோர் பெண்பக்கமே நேராகும் நினையாதே நிச்சயம்! கோரும் காதல் கைகூடாதே! மாறாது நான் சொன்னால் சத்தியம் (சிங்) ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடியே! - மதுரைவீரன் ஏறமுடியாத ஏணி எல்லோரும் நல்லவரே! - உலகினில் (எல்லோரும்) கற்றும் அறிவில்லாதார் என்னிலுமே கல்லாதார் (எல்லோரும்) உலகோரை மேலேற்றும் அருள் ஞானி நான் - இவ்(உலகோரை) தானோர் முழமேற முடியாத பரண் ஏணி நான்! பலகாலம் பயனற்றுப் போனேனே! பக்தி காணேனே பாவியானேனே என்னில் (எல்லோரும்) - கிருஷ்ணபக்தி 204