பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழைக்கு இனியவன்! பல்லவி வாழிய நீடுழி. மெய் வாழிய நீடூழி! பகுத்தறி வாளன் ஆனந்தன் - சதா மனோகரமாய் வாழிய நீடுழி!! அநுபல்லவி தோழமையே சூழ்ந்த அன்பும், சுயநல மில்லாத பண்பும், தாழ்வு முயர்வும் எண்ணாத ரீதியில் மண்மேல் நீதி கொண்டும் - சதா மனோகரமாய் வாழிய நீடுழி!! சரணம் ஏழைக் கினியவனாம் - வான் மழை போல் ஈகையால் இன்பம் செய்வான்; வாழ்வு வரினும் மனித நேர்மைதான் மாறாதவன், துயர் செய்யான் (ஏழைக்) சீலம் கல்வி நலமே வாய்ந்த சீரால் ஓங்கி நீடுழி! (வாழிய) இரு விழி தனிலே புகுந்தான்! - என் இதய வானில் அமர்ந்தான்! இரவியும் மதியும் போல் எந்நாளும் - இயல்போடு புவிதனில் சதா மனோகரமாய் - மெய் (வாழிய) - வேலைக்காரி 205