பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணரின் சிறை வாழ்வு: ஜெயிலுக்குப் போய்வந்த சிரேஷ்டர் மக்களைச் சீர்திருத்து வாங்கோ - இந்த ஜெகத்தை யாளுவாங்கோ - சிலர் 2 திண்டாடித் திரிவாங்கோ - இன்னுந் தெளிவாச் சொன்னாங்க - அதைத் தெரியவச்சதோர் இரண்டு வருஷத்தில் அறிவுக்குப் புரிஞ்சதுங்க! - ஆனாக் கொஞ்சம் சிரமமும் இருக்குதுங்க! பயங்கெட்ட பேர்வழிங்க - அடிதடி பண்ணிக்கிட்டுப் போனவங்க - மனுஷனைக் கொன்னுபிட்டுப் போனவங்க - திருடியும் பெண்ணைத் தொட்டுப் போனவங்க - சோம்பேறிங்க புத்திகெட்டுச் சக்தி கெட்டு போசனமும் தட்டுக் கெட்டுப் போலீசுக் காரராலே புடிபட்டு அடிபட்டுப் போனவங்க உண்டுங்க - அது தப்புங்க! நா அப்படி இல்லீங்க - பின்னே எப்படின்னு கேப்பீங்க! சொல்றேங் கேளுங்க! ஒருசிலர் கொண்ட கொடிய பொறாமை உருவமாச்சுதுங்க - அதாலே உண்மையை மறந்தாங்க -பொய்யை உறுதிப் படுத்தினாங்க. உருட்டும் பொரட்டுமே வரவர உலகத்தில் மிகுந்து போச்சுதுங்க - காரணம் ஒற்றுமை இல்லீங்க - நமக்குள் ஒற்றுமை இல்லீங்க - அங்கே காக்கிச் சட்டை வார்டர்களைக் கண்டேனுங்க - சுத்தக் கதர்ச்சட்டைக் காரரையும் கண்டேனுங்க! களவாணிப் பசங்களையும் கண்டேனுங்க! - வெள்ளைக் கருப்புக் குல்லாக்களையும் கண்டேனுங்க! 2O7