பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதர் அனைவரும் சமானம் தொகையறா 'பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்றே குறிப்பிட்ட வள்ளுவன் குறட்பாவை உணர்ந்தே ஒருப்பட்டு வாழ உடன்படு ((r! . பாடல் சமானம் மனிதர் பிறவியில் ஒருமை என்பதே முறைமை இம்மாநில வாழ்வினில் உணர்வில் ஏற்றிடும் சுகநல உரிமை (சமானம்) அறிவேதரும் பெருமை சிறுமை! அவரவர்பால் அமைந்த திறமை உறவுடன் யாவரும் வேற்றுமை நீங்கிட முயல்வது கடமை! (சமானம்) நல் வழியில் நடப்போம் நல்வழியே நடந்தாத் துன்பம் வந்தாலும் இன்பமாய் மாறும் பின்னாலே - நன்மை அல்லவையே செய்து இன்பம் வந்தாலும் துன்பமாய்த் தோன்றும் தன்னாலே! (நல்வழியே) உள்ளத்திலே வெண்மை, செயல்தனிலே செம்மை உடையவர் தாழ்ந்தாலும் வாழ்வார் - பெரும் கள்ளத் தனத்தாலே செல்வ நலந்தேடும் கயவர்கள் உயர்ந்தாலும் வீழ்வார் (நல்வழியே) தாமுறும் சுகம்தன்னைத் தாரம் பெறக்கண்டே காமுறுவார் என்றும் மேலோர் - பிறர் சேமந் தன்னைக் கண்டு சித்தம் களிக்காத பாமரரே என்றும் கீழோர்! (நல்வழியே) - அபலை அஞ்சும் 226