பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய விதைப்புகள் ! நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்! நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்! பள்ளி என்ற நிலங்களிலே கல்வி தன்னை விதைக்கணும்! பிள்ளைகளைச் சீர் திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்! கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப் பாட்டை விதைத்துக் கற்பு நிலை தவறாத காதற் பயிர் வளர்த்து அன்னை தந்தை யானவர்க்குத் தம் பொறுப்பை விதைத்து, பின் வரும் சந்ததியைப் பேணும் முறை வளர்த்து இருப்பவர்கள் இதயத்திலே இரக்கத்தை விதைக்கணும்! இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப் பயிர் வளர்க்கணும்! (நல்ல) பார் முழுதும் மனிதகுலப் பண்புதனை விதைத்து பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து போர்முறையைக் கொண்டவர்க்கு நேர் முறையை விதைத்து, சீர்வளரத் தினமும் சினேகமதை வளர்த்து, பெற்ற திரு நாட்டினிலே பற்றுதனை விதைக்கனும்! பற்றுதனை விதைத்துவிட்டு - நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்! (நல்ல) - விவசாயி 233