பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியில்லே...! சரியில்லே - உலகம் சரியில்லே! தெரியாமல் எதையும் எவரும் செய்கிறதும் சரியில்லே செய்தபின்னால் மாட்டிக் கிட்டு சிந்திப்பதும் சரியில்லே! மரியாதையை விட்டுக் கொடுத்து மானங்கெடல் சரியில்லே! மானங்கெட்ட பின்னால் மனுஷன் வாழ்கிறதும் சரியில்லே! சரியில்லே - மொத்தச் சரியில்லே! கூட்டத்தில் பேசும் போது கூச்சல்கீச்சல் போடுவதும் சீட்டெழுதிக் கொடுக்கிறதும் பாட்டுப்பாடச் சொல்கிறதும் பாட்டுப் பாடும்போது வாயால் சீட்டிகளை அடிக்கிறதும் சரியில்லே (மெத்தச்) படிக்காத ஆளுங்களுக்கு பட்டந்தரல் சரியில்லே பட்டங்களை கொடுத்துப்புட்டு திட்டுவதும் சரியில்லே அடிக்காமல் பிள்ளை வளர்த்து அறிவுகெடல் சரியில்லே அறிவுகெட்டுப் போனானென்று அழுகிறதும் சரியில்லே! அது சரியில்லே! - மெத்தச் சரியில்லே! பூப்படைந்த பெண்ணைப் பொன்னை புத்தகமிம் மூன்றையும் மாற்றானிடங் கொடுத்துச் காப்பாற்றச் சொல்கிறதும் சரியில்லே - மெத்தச் சரியில்லே. சுதி விட்டுப் பாடுவதும் ஜதி விட்டு ஆடுவதும் நிதி விட்டுத் தேடுவதும் நிலைகெட்டு வாடுவதும் சரியில்லே! - மெத்தச் சரியில்லே! - காவேரி 234