பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணம் பேசுது பந்தியிலே! உலகம் போற போக்கிலே உள்ளது எதுமே நடக்கலே குலமும் குணமும் சந்தியிலே - இப்பப் பணந்தான் பேசுது பந்தியிலே! தலை விரிச்சாடும் பஞ்சத்திலே - பெற்ற தாயிக்கும் பிள்ளைக்கும் சொந்தமில்லை! சமயம் பார்த்து நிலையிழந்தவன் - பொருளைத் தன் வச மாக்கிடும் பாட்டிலே! பணந்தான் பேசுது பந்தியிலே... ஊரக் கெடுத்தவன் முழிச்சிக்கிட்டான் - ஏழை பேரச் சொல்லியே பொழச்சிக் கிட்டான் ஏரெப் புடிச்சவன் படுத்துக் கிட்டான் - அவன் ஏழ்மையில் உடைமையை இழந்து விட்டான்! பணந்தான் பேசுது பந்தியிலே... பகல் வேஷம் போடும் காலமடா - பலர் பகல் வேலை செய்யும் நாளிதடா? காருக்குள்ளே பண லீலை யெல்லாம் - அட பகவானே! இதைப் பார்க்கச் சகிக்கலே பணந்தான் பேசுது பந்தியிலே... - பொன்னி 247