பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணத்துக்கு வாழ்த்து தாஷ்டிக, சந்தோஷ, சம்பூர்ண சம்பிரம கோஷ்டி புரியும் நல்ல கோலாகலப் பணமே! தேம்பணமே எவ்விடத்தும் திகழ்பணமே தேடரிய பூம்பணமே புகழ்ப்பணமே பொன்பணமே என்பணமே! எக்காலத்தும் கோர்ட்டில் பொய்க்கேசும் ஜெயமாக வக்காலத் துகள்பேசும் வக்கீலும் நீயலவோ? நேரண்டும் எதிரியிடம் நிதிவாங்கி மறுபடியும் வாரண்டுங் கையுமாய் வருகிறவன் நீயலவோ? பல்லாடும் கிழவருக்குப் பருவமுள்ள மங்கையரைக் கல்யாணம் கூட்டுவிக்கும் கடவுளதும் நீயலவோ? அதர்மத்தால் ஊரார்தம் ஆஸ்திகளைச் சேர்த்தவனைப் பதவிதனில் ஏற்றிவைக்கும் பரம்பொருளும் நீயலவோ? ஒவ்வுகின்ற கட்சிவிட்டு ஒவ்வாத கட்சிக்கு வெளவால்போல் தவ்வவைக்கும் வடிவழகன் நீயலவோ? வட்டிக் கணக்கினிலே வாட்டி வளைவெடுத்தென் பெட்டியிலே தூங்குகின்ற பெம்மானும் நீயலவோ, திருவே! என் செல்வமே தேனே! வானோர் செழுஞ்சுடரே! அரும்பொன்னே மணியே அம்புவியை ஆட்டுவிக்கும் அரசே! வாழ்க! 249