பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலுகால் குதிரைகளும் இரண்டு கால் குதிரைகளும் டிக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி சல் சலோ சலோ! டக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி சல் சலோ சலோ சலோ! டக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி சல் சலோ சலோ சலோ! நாலுகால் குதிரை நல்லதொரு பாதையில் நன்றாக நடக்குது - ஓடுது நாகரீக மடைந்து ரெண்டு கால் குதிரை நல்ல வழியில் நடக்கத் திண்டாடுது (சல்) காலத் திராட்டு அசைவு துருசு நாலுகால் குதிரை செல்லும் வேகம்! காமக் குரோதக் குணங்களைக் கொண்டது ரெண்டு கால் குதிரையின் அவிவேகம்!! இது - சொல்லும் ஜாடை கண்டு கொள்ளும், அது - சொன்னாலும் கேக்காமெ துள்ளும்! - சிறு பள்ளம் மேடுகளைப் பயமில்லாமலே தாண்டிவரும் நாலுகால் குதிரை - காசு பணத்துக்கிங் காசைப்பட்டுப் பல பல கட்சிகளில் பாய்ந்து வரும் ரெண்டு கால் குதிரை (சல்) வித்யாச மில்லாமல் நாலு கால் குதிரை மேலேற்றி வேகமாய்ச் செல்லும் - எவரையும் மேலேற்றி வேகமாய்ச் செல்லும்! மேலென்றும் கீழென்றும் ரெண்டு கால் குதிரை வித்யாசம் காட்டித் தள்ளும் - சாதி வித்யாசம் காட்டித் தள்ளும்! புத்தி யுள்ள நாலுகால் குதிரை யானாலும் பத்து முழம் தள்ளி இருக்கணும்: புத்தி கெட்ட ரெண்டு கால் குதிரையின் கண்களுக்கு புலப்படாமல் இருக்கணும் (சல்) - - ஆசை 265