பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவறிந்து பழகியபின் அன்புரிமை நாடு! கூட்டத்திலே சின்னச் சின்ன குறையிருந்தாலும் குணத்தைக்கொண்டு நோகாமலே குலவிடுவோம் நாளும்! கருத்தின் நிலை மாறாமே கட்டே அவிழ்த்துப் பாக்காமே (கண்ணே) - துய உள்ளம் மானம் அற்றது வாழ்வு அல்ல மான மெல்லாம் போன பின்னே வாழ்வது தானொரு வாழ்வா? வணிகர் குல மரபினர்க் கோர் வசைதர ஏன் பிறந்தேனோ? குஞ்சர மீதும் பஞ்சணை மேலும் குலவிய காலம் ஓர் காலம், நஞ்சனை யாளின் வஞ்சனை யாலே நடைப்பின மானதோர் காலம்! கரை யடுத்த நீரிருக்க கானலை நாடிடும் மானினம்போல் கனி கொடுத்தாள் தனை விடுத்தே கணிகையின் பால் அலைந்தேனே! கற்பக மேவும் கனி யருந்தாமல் காஞ்சிரங் காயை யுண்டேனே, காமுகன் யான் கண்ணகியாள் மாமுகம் காணவு மாமோ? தப்பிதம் யாவும் நானே புரிந்தும் தாசியை நோவதும் வீணே? (மானமெல்லாம்) - கண்ணகி 269