பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டா இல்லையா? உண்டென்பீரா? - இல்லே - பொய்யென் பீரா? ஒப்புக் கொள்வீரா? - சொன்னாத் - தப்பென்பீரா? - இங்கே உள்ளவங்க வேஷத்தாலே உயர்ந்தோர்கள் உண்டென் கிறதை.... பெரியோர்கள் தேடிய பணத்தால் திருவாளர் ஆனவர் பலபேர் உறுதியாகிய உழைப்பா லிங்கே ஊதியம் பெறுபவர் இல்லையென்பதை மிகு... மிகு. டம்ப மேன்மைகாட்டி. டீ.பார்ட்டி தந்து காசை நீட்டி - பொய்ப்பங்கு பத்திரங்கள் தீட்டி... சூழ்ச்சியாய் . பாங்கியிலே மாட்டி - பெரும் பணத்தை ஈட்டிப் பொது ஜனத்தை வாட்டும் சில கனவான்களும் இதில் கலந்திருப்பதை ஏதேதோ ஆசையும் வச்சு இருந்த ஆஸ்தி அடகும் வச்சு - ஏதோ ஈன்றோர் தரும் பணத்தையும் வச்சு இன்பமாக சிகரெட்டும் புடிச்சு காப்பிக் கிளப்பில் கடனும் வச்சு கல்விக்கும் பூஜ்யம் போட்ட மாணவர் உரிமை யோட்டுச் சீட்டை - வாங்கவே உதறுவார்கள் நோட்டை - பின்னாலே பெரிய பதவி வேட்டை - ஆடியே பெறுவார் பண மூட்டை - அந்த மூட்டையோடு தினம் கூட்டுச் சேர்ந்து நம்ம நாட்டைக் கெடுப்பவர் இங்கே இருப்பதை தியாகத்தாலே வந்த சுதந்திரம் தரணியில் நிலைபெற வேணுமென்றால் சிநேகமாகவே மக்கள் எல்லாம் போக பாக்கியம் பெற வேணுமென்றால் ஜாதி பேதத்தைத் தட்டி எரிக்கணும்! தன்னலங்களை வெட்டி முறிக்கணும்! தீதில்லாமலே தேகம் உழைக்கணும்!! தேச கெளரவம் நாளுமுயர்த்தணும்!!! 272 (உண்டென்பீரா?) (உண்டென்) (உண்டென்) (உண்டென்) (உண்டென்) (உண்டென்)