பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பம் வருகையில் நகை! இடுக்கண் வருங்கால் நகுக - என வள்ளுவன் எடுத்துரைத்த பொன்மொழியை எண்ணிப்பார் நெஞ்சே! துன்பம் வரும்போது நகைத்திடுவாய் - கால் தூசுக்கும் சமமாய் மதித்திடுவாய் - நீ (துன்ப) நெஞ்சுரமும் துணிவும் நேர்மையும் இருந்தாலே துன்பமே தோல்வியுறும் தன்னாலே துயரே மகிழ்வின் தொடராம் அதனால் - நீ (துன்ப) புயலுக்குப்பின் அமைதி வருவது போல் இருளுக்குப் பின் பொழுது புலர்வது போல் துயருக்குப் பின் சுகமே தொல்புவி மேலே தொடர்ந்தே வருவது இயல்பாம் அதனால் - நீ(துன்ப) ஞானத் தங்கமே...! ஒரு பத்து மாதம் உயிர் விந்து நாதம் சொரூபத்தைக் கொண்டல்லவோ - ஞானத் தங்கமே தூல மென்றாச் சுதடி! தவத்துக்கு ஒருவரடி தமிழுக்கு இருவரடி சவத்துக்கு நால்வரடி மணித் தங்கமே! - தரணி வழக்கமடி ஞானத் தங்கமே! (தரணி) வாதி புளுகன் வைத்தியன் மாந்திரீகன் சோதிடன் என்பவனோ - ஞானத் தங்கமே சுத்தப் புளுகனடி! பூசாரி பொய்யன், புலவனும் பொய்யன் ஆசாரி யென்பவனோ - ஞானத் தங்கமே அடங்காத பொய்யனடி - மாமியார் மெச்சிய மருமகள் 273