பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாளும் எழுது கோலும் வாள் முனையில் கத்தியினால் உலகை யாளுவோம்; - இதன் வலிமையினால் பகையை வீழ்த்தி வாகை சூடுவோம்! - வெற்றி வாகை சூடுவோம்! அரசாளும் சக்தியாவும் எங்கள் வீர வாளுக்கே! - இந்த ஆண்மை யேது உலகினிலே எழுது கோலுக்கே - ஏழை எழுதுகோலுக்கே! அரை நொடியில் ஆண்டியையும் அரசனாக்குவோம்; மக்கள் அடிமை வாழ்வைப் போக்கி நாட்டின் விடுதலை காண்போம்! (வாள்) எழுது கோலின் சக்தியாலே உலகை ஆண்டிடுவோம்; - என்றும் அழிவில்லாத கலைகளினாலே அறிவை வளர்த்திடுவோம்! நாவசைத்தால் நாடகம் கவிக் காவியம் பெருகும்; - உயர் நாகரீகப் பண்பும் அன்பும் நாட்டிலே பெருகும்! நவலோகச் சொர்க்கபோகம் யாவும் சேரும் வாழ்வினிலே கத்தியின் சக்தியை அறியாமல் தற்புகழ்ச்சி பேசாதே போ போ! போ! சேரன் சோழன் பாண்டியன் வாழ்வு சிறந்து ஓங்க ஜெயமளித்த கத்தி சென்ற கால நிகழ்ச்சியும் மக்கள் வாழ்வின் மகிமையும் பொன் எழுத்தால் பொறித்துக் காட்டும் சக்தி! இணையாகும் கண்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து மோதலாகுமா? - இந்த 274