பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டை என்ன சொல்லுவேன்? தமிழ் பாடல் ஆடல் பல்லவி பாட்டை யென்ன சொல்லுவேன் - பாங்கி பாவலர் ஞான ஒவியமான (தமிழ்ப்) அநுபல்லவி பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசைக் கூட்டினிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப் (பா) ஆட்டம் ஆனந்தம் தரும் - சதுர் (ஆ) அழகான மயில் போலும் ஒயிலாக ஆடும்சதுர் (ஆ) பாட்டுக் கிசைந்த ராகதாளம் கூட்டி - தமிழ்ப் (டா) பார்வையுடன் சுரங்கள் கால்களாட்டி, தீட்டும் கவிப்பொருள் தெரியக் காட்டிப் (புலவர்) சிந்தை மகிழ இந்த தேகாரோக்கியம் பெறும் (ஆ) - ராஜகுமாரி தமிழாலே தாலாட்டு! கண்டவர் கண்ணுப்படும் செல்லாத்தா - ஒரு கருப்புப் பொட்டே வச்சிவிடச் சொல்லாத்தா தண்டை சிலம்பெடுத்துப் போடாத்தா - நல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா! தேடாத திரவியமே ஆரிராரோ! சிங்காரப் பைங்கிளியே ஆரிராரோ! வாடாத மாமலரே ஆரிரரோ - மனம் மகிழவைக்க வந்த கண்ணே ஆரிராரோ!