பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அன்னையின் திருப் புகழ்! தன தனந் தான தன தனந் தான தன தனந் தான - தன தான இயல்அது மாகி இசையது மாகி இவையொடு நாட கமுமாகி இளமைகுன் றாத எழிலொடுந் தோணும் இனிமையென் றோதும் வடிவாகி குயிலினங் கூவுங் குடகமுஞ் சேரர் குமரியுஞ் சீதக் குணவாரி குலவுபொன் தேவி பெயர்வருஞ் சாரல் குறியிடும் பூமி இடை மேவும் செயல் செயும் ஆதி அரசியும் ஆகி தெளிவுறும் ஞான அறிவாகி செகணசெஞ் சேகு தனதனந் தான திருவெனுந் தாள ஒலியோடு நயமிகும் பாடல் புலவர்தம் நாவில் நடமிடுந் தோகை மயிலாகி நவிலவும் ஆய கலைகளும் ஆகி நனிபெறுந் தூய தமிழ் மாதே! - கோவை முத்தமிழ் மாநாடு