பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தாயை வணங்குவோம்! தொல்லெ ழுத்தொடு சொற்பொருள் யாப்பணி நல்லி லக்கணச் சீர்திகழ் நாற்கவி வல்லு நர்திரு வாக்கில் நடஞ்செயுங் கல்வி யாந்தமிழ்க் கன்னியைப் போற்றுவாம் பாவி னங்கள் பராவிய கற்பனைக் காவி யங்கள்பு ராணங்கள் காதைகள் ஒய்வி லாமலொ லித்திடும் முத்தமிழ்ப் பூவை தன்னெழில் பூங்கழல் பற்றுவாம் பூத லம்பெறு மாந்தர் புலன்வழிக் காத லுற்றுக் கலந்துற வாடிட ஒதும் பாங்கில் உதித்த மொழிக்கெலாம் ஆதி யாந்தமிழ் அன்னையைப் போற்றுவாம். முக்கு லத்தின் முடியுடை மன்னர்கள் மக்கள் நன்மதி வாழ்க்கை வளம்பெற அக்க றையுடன் அன்பில் வளர்த்த நற் சக்க ரைத்தமிழ்த் தாயை வணங்குவாம். நல்லவை யாவும் நாடிடும் நாடு! கலை முதலாகத் தொழில்முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு முதல் முதலாக நல்லவை யாவும் முயன்று முடிப்பதும் தமிழ்நாடு. (கலை) பாட்டால் உணர்ச்சி யூட்டும் கவி பாரதி சேர்தமிழ் நாடு! நாட்டு மக்கள் முன்னேற்றந் தன்னை நாடியே கவிதை பாடிவைத்த தமிழ் (கலை) உலகம் வியக்கச் சுதேசிக் கப்பல் ஒட்டியதும் தமிழ் நாடு திலக மெனப்புகழ் ஓங்கும் சிதம்பரம் பிள்ளை செயல்புரிந்த தமிழ்க் (கலை) உலகில் முதலில் கள்ளை ஒழித்ததும் எம்தமிழ் நாடு உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய் உணர்ந்து நடப்பதில் எமக்கீடில்லை. (கலை) - நல்ல தம்பி