பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு நடக்கிற நடை! நாடு நடக்கிற நடையிலே நமக்கே ஒண்ணும் புரியலே! நாகரீகத் தினுசுகளாலே நல்லது கெட்டதும் தெரியலே! லேடிகள் போடும் ரவிக்கைத் துணியில் ஆடவரின் புஷ் கோட்டுகளாம்; ஆடவர் மாதிரி பெண்கள் மேலே அங்கி நிஜாரு வேட்டிகளாம்! (நாடு) 西 கலையைப் படிச்சவன் காத்தாப் பறக்கிறான்; காக்கா புடிக்கிறவன் காரில் பறக்கிறான் குலமகள் ராகிக் கூழைக் குடிக்கிறாள்; கூறுகெட்டுப் போனவ கும்மாளம் கொட்டுறா! (நாடு) உதவி என்று பல நிதிகள் திரட்டுறான்; ஊராரை ஏச்சுப் புட்டு உண்டு களிக்கிறான்! இதம் பல பேசி எலக்ஷன் ஜயிக்கிறான்; பதவிக்கு வந்ததும் பச்சோந்தி யாகிறான்! (நாடு) - செல்லப்பிள்ளை 17