பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டில் பஞ்சம்! சந்தோஷங் கொள்ளாமே சாப்பாடும் இல்லாமே தாய்நாடு திண்டாட்டம் போடுதே - தினம் அந்தோ துன்பம் கொஞ்சமா நெஞ்சமே அஞ்சுதே பஞ்சத்தால் நாடு வாடுதே... (தி) வேலையில்லே வேலையில்லே செய்தாக் கூலியில்லே கேட்பார் யாருமில்லே நாட்டிலே - ஏழை விவசாயம் வீணாச்சு நாட்டிலே - உயர் விண்மாரிதான் விழியிலே அழுகையாய்ப் பொழியுதே நாடு பஞ்சத்தால் வாடுதே... (சந்) - காவேரி சக்திக்கேற்ற உழைப்பு... தேவைக்கேற்ற வசதி. விடுதலை. விடுதலை. அடிமை பேழையென எவருமில்லை - இனி உடல் பொருந்திடா இழிவையும் யுக்தி மேவாத பழமையும், மடமையால் நிகழும் அழிவையும் மதியில் வென்று மனிதரென்ற நிலைபெற (விடுதலை) ஒடும் ஆற்றை இடை மறித்தும் - நீர் உண்ண வைத்துப் பயிர் வளர்த்தும் தேடும் சக்திக் கேற்ப உழைக்கவும் தேவைக்கான வசதி பெருக்கவும் (விடுதலை) - நல்ல தம்பி 21