பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக்கு நல்ல சுதந்திரம் பல்லவி நாட்டுக்கு நலனுங் கண்டோம் - பட்ட பாட்டுக்குப் பலனுங் கண்டோம் - நம்ம (நாட்) அநுபல்லவி ட்டில் படிச்சதும் எல்லாருஞ் சொன்னதும் எண்ணியிருந்ததும் உண்மையாக - நம்ம (நாட்) சரணங்கள் நேசன் லஜபதி நெஞ்சமாகிய நிலத்தில் பண்பட்ட சுதந்திரம் - புகழ் வீசும் தாதாபாய் நெளரோஜி யென்பானிட்ட வித்தில் முளைத்த சுதந்திரம் தேசபக்தியாந் தெண்ணீரை வார்த்து - ஞானத் திலகன் வளர்த்த சுதந்திரம் - மறு மாசில்லாத எம் மகாத்மா காந்தி மன வானில் படர்ந்த சுதந்திரம். (நாட்) மாதாவே கண் பார்! பாரத மாதா நீயே - கண் பாராய்! பாரது நம் சுதந்திரம் சீராய், பரவநின் மணிக்கொடி பறக்கவே அன்பாய்! (பாரத) மாரத வீரர் ஆகஉன் மாந்தர் மாண்பு சேரும்புய வாகாளராய் வலிமை பெருகு ஜெய வாழ்வை நாடவே (பாரத) சமய விவாதம், ஜாதி விரோதம் தாழ்வுயர்வெனத் தகாக் குரோதமே தகர்ந்தெழில் சமரசம் தானுண்டாகவே! (பாரத) 23.