பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமானம் அவமானம்! பல்லவி பாராத கண்பாபம் செய்த கண்ணடா - அவள் பார்மீது வந்தவொரு தெய்வப் பெண்ணடா - அவள் அநுபல்லவி நீராரும் கடல்தந்த நிதிமாது - மா நிலமென்னும் பொறைமாது கலைமாது சீராரும் திருமாதர் ஒன்றாகத் திகழ்மாது! நேராகப் பூங்காவில் நான்கண்டேன் நிஜமிது (பாராத) சரணம் நாற்றந்தரும் மீனை நங்கையின் கண்களென நாம் சொல்லும் உவமானம் அவமானம்! ஏற்றிடும் சரஞானம் இல்லாத குயில்தன்னை ஏந்திழைக் கினைசொல்லல் அஞ்ஞானம்! சாற்றிடும் வண்டுமிழும் தேன்பானம் - அந்தத் தருணியின் மொழியென்றால் மதியீனம் போற்றிடும் குலமாதர் புகழ்ந்திடும் குருஸ்தானம்! பொய்யல்லடா அவளுக்கவளே சமானம்! (பாராத) 43