பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொட்டு மலர்ந்தது! தோழிகள் ; ரோஜா மொட்டு மலர்ந்தது மலர்ந்த மட்டும் சிவந்தது! ரூப சுந்தரம் சோபிதமாய்ப் புதிய மாற்றம் அடைந்தது! ஏமாற்றம் அடைந்தது! இதை ராஜா கையில் பெருமைக்காகப் பிரியத்தோடு கொடுக்கலாம்... அவர் ஆசையோடு சுகந்த வாசம் பிடிக்கலாம் - இதை ரசிக்கலாம். (ரோஜா) பூவுமாகிப் பிஞ்சுமாகிக் காயுமாக முதிர்ந்ததாம் - அதில் புளிப்பும் மாறி இனிப்பதான கனியுமாகத் திரண்டதாம் - (ரோஜா) பாடித்திரிந்த குயிலுக்குஞ்சும் பறந்து பாட முனைநததாம - அது பருவக்காலக் கோளாறுன்னு பாக்கப் பாக்கத் தெரிஞ்சுதாம். (ரோஜா) பொற்கொடியோ? பூங்கொடியோ? பல்லவி பொற்கொடி மேல்கண்ட புதுமையெல்லாம் - இந்தப் பூங்கொடி மேல் காணேனே - நானே என் (பொற்) அநுபல்லவி கற்பனையால் வந்த காவியப்பொருள் யாவும் காரிகையாய் வந்தென் கருத்தினிலேமேவும் (பொற்) சரனம் வெண்மதித் துண்டொன்றில் வில்லிரண்டும் கெண்டை - மீன்களிரண்டும் கண்டேன் - நானே (வெண்மதி) தண்டுலாவும் வாழைத் - தார்களும் - தேனுறும் செம்பவளங்கள் கண்டேன் நானே சந்திர பிம்பங் கண்டேன் - அதன்மேல் கொண்டலுலாவக் கண்டேன் இன்பந்தரும் இந்த எழில்வளம் கண்டேன் இனியவை யாவும் கண்டேன் - நானே. (பொற்கொடி) 44