பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பாப்பா நான், தென்ன மரத்திலே குந்தியிருப்பதைச் சின்னப்பாப்பா - அவ தெருஞ்சுக்கிட்டாச் சிரிச்சிக்கிட்டே என்னப்பாப்பா! எதித்த ஊட்டுப் பாப்பா! எம், பாட்டுச் சத்தம் கேட்டுதின்னாச் சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா - அவ ஆட்டத்தோடு அபிநயத்தப் புடுச்சுப் பாப்பா கொடுங், கோடையிலே குளுகுளுங்கற குமரிப் பாப்பா - எங்க குமரிப் பாப்பா - பனி வாடையிலே வெதுவெதுங்கிற வயசுப் பாப்பா யேன், ஆசையெல்லாம் நீதான்னா சின்னப்பாப்பா! எங்க சின்னப்பாப்பா - ஐயோ அப்படி எனக்கும் இருக்குதும்பா அறிவுப் பாப்பா - நல்ல அழகுப் பாப்பா நான், எறங்கி வந்து எதுக்க நின்னாச் சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா - நீங்க இங்கே எப்படி வந்தீங்கோன்னு என்னைக் கேப்பா! நான், அக்கம்பக்கம் பாக்கையிலே சின்னப் பாப்பா! எங்க சின்னப் பாப்பா! - இங்கே யாருமில்லே சொல்லுங்கோன்னு வாயப் பாப்பா - என், வாயப் பாப்பா நான், போட்டுக்கவா அதைப் போட்டுக்கவா நான் போட்டுக்கவா தாலியின்னா - சின்னப்பாப்பா எங்க சின்னப் பாப்பா - சர்தான் போட்டுக்கோன்னு கழுத்தெ மெல்ல நீட்டிப் பாப்பா - கழுத்தெ. நீட்டிப்பாப்பா. பாப்பா... பாப்பா... யப்பா... தப்பா யப்பாப்பா... பப்பா (நான் தென்ன) - பேசும் தெய்வம் 45