பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா! ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே! ஆனந்தம் - தேடுதே! (ஆகாய) இருளான மேக மென்னும் திசையின் பின்னாலே மறைந்தே இந் நாளே உறவோடு ஒடியாடி உயர் காத லாலே உவந்தே மென் மேலே அலங்காரத் தாரகையோடு அசைந்துஞ்சல் ஆடுதே! ஆனந்தம் தேடுதே! இன்னலாகத் தோன்றும் மின்னல் இடைமறித்தாலும் இடியெதிர்த்தாலும் கண்மணித் தாரகை தன்னைக் கைவிடேன் என்றே களிப்போடு சென்றே அலங்காரத் தாரகையோடு அசைந்துஞ்சல் ஆடுதே! ஆனந்தம் தேடுதே! ஆகாய வீதியில் அந்தோ மின்னல் மின்னுதே! ஆபத்து வருகிற தென்றே! அடாத மழை யிடி யிடிக்குதே!ஆனந்தத்தைக் கெடுக்குதே! - மஞ்சள் மகிமை 51