பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழி வாசலில் வெளிவந்த இதயம் பெண் ; வெண்ணிலாக் குடைபிடிக்க வெள்ளிமீன் தலையசைக்க விழிவாசல் வழிவந்து இதயம் பேசுது! ஆண் : இனி நீ என் வசமே இணையாய் நாம் காணும் ஆனந்தம் நேசமே! (வெண்ணிலா) கொல்லாமல் கொல்லுகிறாய் கோமளமே விழியாலே! பெண் சொல்லாமல் சொல்லுகிறாய் சுத்தத் தமிழ் மொழியாலே .. ஆ... ஆ.. ஆண் ஒண்ணுமே புரியலையே பெண் : எண்ணமே சரியில்லையே ஆண் சரியாக இதுவேளை தனிமை வேணுமே! பெண் பழமும் பழுத்திருக்க பருவம் அமைந்திருக்க பசிநோய் தீராமல் பார்த்தாலே போதுமா? ஆண் எல்லாம் தெரிந்து கொண்டான் இதயமுள்ள சொக்கனுமே உல்லாச மாயிருக்க யோசனைக்கு இடம் கொடுப்பாய் ... ஆ. ஆ பெண் எழிலின் இருப்பிடமே எனக்கில்லை மனத்திடமே! ஆண் : எளியேன் மேலின்னும் ஏனிந்தக் கோபமே? (வெண்ணிலா) - அபலை அஞ்சுகம் அன்பில் விளைந்த அமுதம்! பல்லவி அன்பில் விளைந்த அமுதமே! அன்னமே! என் கண்ணகி...! அநுபல்லவி கன்னல் தெளிதேன் பாகு சீனி கனியும் சேர்ந்த கற்கண்டாம் உன் மேனி! (அன்பில்) சரணம் காணும் கலை நீ கலாப மயில் நீ! காதல் உலகக் கடலும் நீயே! மானி நீ என் மா தவம் நீ! மாசில்லாத இல் வாழ்வில் நலம் நீ! (அன்பில்) - கண்ண 69