பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்ட நிலாவுக்குள் குட்டி நிலா பட்டப் பகல் தனிலே - தங்கமே வட்ட நிலாவைக் கண்டேன் - அந்த வட்ட நிலாவுக் குள்ளே - தங்கமே குட்டி நிலாவும் கண்டேன்! குட்டி நிலா முடிமேல் - தங்கமே கொண்ட லுலாவக் கண்டேன் - நிலவில் ஒட்டிய செஞ்சிலைகள் - தங்கமே ஒப்பனை மீன்கள் கண்டேன்! மொட்டு முல்லைச் சரங்கள் - பவளப் பெட்டிக்குள் சேரக் கண்டேன்; கட்டழகே சிலைமேல் - எழிலைக் கற்பனை செய்து கண்டேன்! கொல்லன் உலைதனிலே உருகாக் கோமளப் பொன் சிலையோ? வல்ல தமிழ்ப் புலவோர் புகழும் வஞ்சி இவள் வடிவோ? தேவமகள் இவள் யார்? தேவமகள் இவள் யார்? - இவள் யாரோ? தேனின் மொழியாள் தென்றலின் ஒயிலாள் பூவிலயன்மால் புரமெரித்தோனும் யாவரும் மயங்கும் மோஹினி தானோ? லோக மோஹன யோகினி போலே ஜாடை காட்டும் அன்னப்பேடையன்போடு கூடிக்குலாவும் அந்நாளும் எந்நாளோ? - கண்ணகி