பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சி வளர்ந்த கதை மேதினம் ! தொழிலாளர் வாழ்வை வதக்கி அவர் கள் எலும்புகளை மென்றுதின்று தங்கள் மேனியை மெருகேற்றிக் கொண்ட முதலாளி வர்க்கத்தின் மென்னையை இறுக்கிக் கொன்றவரின் கொண்டாட் டம். பீட்டர்ஸ்பர்க் நகரத்துப் பாட்டாளி மக்கள் பசியெனக்கதறியதற்காக அவர்களை ரத்தத்தில் மிதக்க விட்டு கோரச் சிரிப்பு சிரித்த கோமான்களின் குரல் வளையை அமுக்கியவர்களின் குதூகல விழா. . மலைப்பாம்பினுங்கொடிய மதம் மாய்ந்தது மக் களின் வாழ்வைக் குடித்து ஏப்பமிட்ட பணக்காரப் பேய்க்கும்பலின் ‘பவிசு’ குறைந்தது... கஷ்டப்பட்ட தை-கண்ணீர் விட்டதை-கலங்கி நின்றதை-கதி யிலை எனக் கதறியதை கண்ணெடுத்தும் பாராமல் கற்களாய் நின்று அறிவைக் காவுகொண்ட கடவுள் கூட்டத்தின் வம்சம் பூண்டற்றுப் போனது-என்ற மகிழ்ச்சியை நரம்புகளில் ஏற்றிக்கொண்டு இரஷ்யப் பாட்டாளி மக்கள்-ஏன் உலகப் பாட்டாளி மக்கள் மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் பிணமாக வீற்றிருக்கிற மாவீரன் இலெனினை நினைத்துக்கொண்டு வீரநர்த் தனம் புரிகின்ற வெற்றி விழா ! மனித சாதியின் உயர்வுக்கே ஏணியாக- வாழ் வுக்கு வழிகாட்டியாக-அமைந்தது மே தினம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/10&oldid=1701802" இலிருந்து மீள்விக்கப்பட்டது