பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 10 ய 1917 மார்ச் மாதம் 8-ம் நாள் புரட்சி உருவாயிற்று இரஷ்யாவில்! பீட் ரோகிராட் நகரில் உள்ள நெசவுத் தொழிலாளப் பெண்கள் புரட்சி பவனி நடத்தினர், 1917 நவம்பர் 7-ம் நாள் சோவியத் அரசாங்கம் தோற்று விக்கப்பட்டது. இலெனின் அமைச்சர் குழு வின் தலைவன் புரட்சிகளுக் கெல்லாம் வித்தாக இருந் தது ஒரு தியாகியின் புன்னகை. 1905ல் அடக்கு முறை தாங்கமாட்டாமல் துடித்தெழுந்த ஒரு இளை ஞன், நிக்கோலாஸ் மன்னனின் நெருங்கிய உறவின் னான உயர்தர இராணுவ உத்தியோகஸ்தன் செர்கியஸ் கோமகனை பட்டப்பகலில் கொன்று குவித்தான். கொலை செய்தவன் நிலை குலைந்து ஓடவில்லை சமுதாயத் திற்குத் தேவையான ஒரு காரியத்தை செய்ததாகவே எண்ணினான். போலீஸ் அதிகாரிகள் அந்தக் கொலை காரனிடம் ஏதாவது வாக்கு மூலம் வாங்கிவிடவேண்டு. மென தலைகீழாய் நின்று பார்த்தார்கள். ஒரு எழுத்து கூட எழுதிக்கொள்ள முடியவில்லை எப்படியும் சாகப் போகிறோம் என்ற நெஞ்சுரம் அவனை ஊமையாக ஆக்கிவிட்டது, மௌனமாகவே இருந்தான். தூக்கு மேடையிலே நிறுத்தப்பட்டான். "கொலைகாரனே! உன் உயிரைக் குடிக்கப் போகிறேன்" என்று கும்மா ளம் போட்டது தூக்குமேடை. அப்பொழுது தான் அவன் உதடுகள் அசைந்தன. பேசுவதற்கல்ல புன் சிரிப்புக்காக! அந்தப் புன்சிரிப்பிலே எவ்வளவு பெரிய பயங்கரமான புரட்சிப் பொறி பறந்தது தெரியுமா? செர்கியஸ் கோமகனை சாக அடித்தான். தான் சாவ தற்கு சிரித்தான். சமுதாயம் தன்னை மறவாது... என்ற திருப்தி - இரஷ்ய வரலாறு தன்னை ஒதுக்கிவிடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/11&oldid=1701803" இலிருந்து மீள்விக்கப்பட்டது