பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 என்ற நம்பிக்கை-இவைதான் அந்த வாலிபனின் இத ழோரப் புன்னகை. சாவின் சிரிப்பு ! அந்த சிரிப்பு மறைவதற்குள் நாட்டிலே வேலை நிறுத்தங்கள் எழுந்தன. வேலை நிறுத்தத்திற்கு ஜார் அரசாங்கத்தால் வேட்டு வைக்கமுடியவில்லை. அர சாங்கம் திணறியது. எட்டுமாத காலம் வேலை நிறுத் தம் வெற்றிகரமாக வாழ்ந்தது. ஜப்பானுடன் சமர் செய்த இரஷ்யா சரண் புகுந்த வேளையது. ஜனசமுதா யம் ஜார் ஆட்சியைக் காரி உமிழ்ந்தது. புரட்சி வளர்ந் தது. 1906 ம் ஆண்டில் ‘டூமா' கூடிற்று. சீர்திருத் தங்கள் சில செய்ய அந்த 'டூமா' விரும்பியது டூமாவின் சிருஷ்டிகர்த்தா ஜார் !...சிருஷ்டி கர்த்தாவே டூமாவை சிதைத்தான். காரணம்; அது நல்லவை செய்ய எண்ணி யது தான். டூமா என்றால் ஜனப்பிரதிநிதி சபை என்று பொருள். இது ஜாருக்கு பிடித்திருந்தால் லெனின் பிறந்திருக்க வேண்டியதில்லை. 1907-ல் டூமாவுக்கு தேர்தல் நடைபெற்றது, ஜாரின் வால் பிடிப்போர் வெற்றி பெற்றுங்கூட...அவர்கள் வாயிலும் தப்பித்த வறி நல்ல பேச்சுக்கள் வந்துவிட்டன, இரண்டாவது டூமாவும் இறந்தது. இல்லை...சாக அடிக்கப்பட்டது, ஜாரால்! வயது வந்த எல்லோருக்கும் ஓட்டுரிமை இருப்பது ஜாருக்கு பிடிக்கவில்லை. மேல் அந்தஸ்தினருக்கே ஓட்டுரிமை அளித்து மூன்றாவது டூமாவுக்கு தேர்தல் நடத்தினான். அது ஐந்து ஆண்டுகள் உயிரோடிருந் தது. 1912-ல் நான்காவது டூமாவின் தேர்தல். அது முதல் ஜார் ஆட்சியின் அடிபீடம் ஆடத்தொடங் கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/12&oldid=1701804" இலிருந்து மீள்விக்கப்பட்டது