பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அரசன், அறிவை விலை கேட்பவன். ஆண்மை எந்தக் கடையில் விற்கும் என விசாரிப்பவன். ஆனால் அக்கிரமத்தின் மொத்த வியாபாரியாக விளங்கினவன். தன்மனைவியின் தளிர்க்கரங்களே அவனுக்கு செங் கோல்!... அவளது அந்தப்புறமே அவனுக்கு சபாமண் டபம். லீலா விநோதங்களே' அவனுக்கு சட்டபுத்தகம். மதுவுண்ட மந்தியை தேள் தீண்டிடுவதுபோல் ரஸ் புடீன் என்ற மதவாதி அவனை நெருங்கினான். ரஸ் புடீன்-ஜாரின் மனைவி இருவரும் கிழித்த கோட்டை ஜார் தாண்டுவதில்லை, இரஷ்யாவின் மங்கையற்கரசி யும் - குலச் சிறையுமானார்கள் அவர்கள் !...ஜார் சாய்ந் ததற்கு இவர்களே பூகம்பமாயினர். கொடுமை தாண்டவமாடிற்று. அணையப்போகும் விளக்காக ஆயிற்று அது!... போல்ஷ்வெக்கர் கட்சியினர் தூக் கில் தொங்கினார்கள். புரட்சி புகைய ஆரம்பித்தது. அது எரிமலை என்பதை அந்த ஏமாளி மன்னன் உணரவில்லை. அதே நேரத்தில் 1914 வந்தது. உலக மகாயுத்தத்தின் கோரைப் பற்கள் நீட்டப்பட்டன. கூரிய நகங்கள் எட்டிப்பார்த்தன. போரில் கலந்து கொண்ட இரஷ்யா 1915-ல் டான்னென்-பெர்க்கில் ஜெர்மானியரிடம் படுதோல்வி கண்டது துவண்டு போன மன்னன் ஒரு புது மந்திரி சபை அமைக்க எண்ணினான். அந்த எண்ணத்தை வளர விடாமல் தீய்த்து விட்டனர், மன்னன் மனைவியும்- மாபாதகன் ரஸ்புடீனும்! 1916-₪......ĿDGOT GOT IT 1916-ல் மன்னர் குடும்பத்தில் மற்றொரு கொலை.1905.ல் தூக்கு மேடையில் சிரித்தானே ஒரு சிங்கக்குட்டி...அவன் சிரிப்பின் எதிரொலி 1916-ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/13&oldid=1701805" இலிருந்து மீள்விக்கப்பட்டது