பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்புடீனை 13 சுட்டுக்கொன்றது. அடக்கு முறை குமுறிற்று. புரட்சியும் கொந்தளித்தது. போர் முனையிலே ஜார் ! இங்கோ புரட்சிக்கொடி யை பெண்கள் பறக்கவிட்டனர், 1917 மார்ச் எட்டாம் நாள் ! ரஷ்ய தலைநகரம் 'கிடுகிடு' வென நடுங்கிற்று.யுத் தகளத்திலிருந்த படியே உத்திரவிட்டான் ஜார், 'சுட் டுத் தள்ளுங்கள்' என்று ! யார் யாரைச்சுடுவது? எரிமலைகள் பொங்கி வழி யும் போது அதை எதிர்க்க எண்ணெய்க் கிணறுகளா? தானே நேரில் புறப்பட்டான் ஜார் ! அவன் வந்த புகைவண்டிக்கு பாதை கிடையாது, நாடாண்ட மன் னாதி மன்னனின் கதி... இதுவென ஏங்கினாள் ஜாரின் மனைவி. காடாளும் காண்டா மிருகமவன் என கர்ச் சனை புரிந்தது மக்கள் உள்ளம். ஜனப்பிரதிநிதி சபை யின் அவசரக்கூட்டம் கூடியது. புரட்சியை அடக்க ஒரேவழிதான் தெரிந்தது அவர் கட்கு! அது தான் “ஜார் அரசனின் முடிதுறப்பு வைபவம்” ரோமனால் அரச வம்சத்திற்கே அன்றுதான் முடி துறப்பு விழா. முதலாளி-மதவாதி வர்க்கத்திற்கே அன்று இரஷ்யாவில் இடுகாடு கட்டப்பட்டது, புதி தாக! சாகாவரம் பெற்றிருந்த முதலாளி மதவாதிக் கூட்டங்கள் சிரஞ்சீவிப் பட்டத்தையிழந்து சிதையில் ஏற்றப்பட்டன. அந்தக் கொடுங்கோலர் கூட்டத்தின் உயிர்த்தோழனான கடவுளீயம் "சிதையே சிதையே’ என்று பாடிற்று. புரட்சி அடங்கிற்று. மழை ஓய்ந்தது: தூறல் நிற்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/14&oldid=1701806" இலிருந்து மீள்விக்கப்பட்டது