பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சுமார் எட்டுமாதங்கள் இரஷ்யாவில் சில்லறைக் குழப்பங்கள். தொழிலாளர் சக்தி முழுவதையும் போல்ஷ் வெக்கட்சியின் பக்கம் திரட்டத் திட்டம் போட்டான் இலெனின். 1917 நவம்பர் ஏழாம் நாள் அகில இரஷ்ய சோவியத் காங்கிரஸ் பீட்ரோ கிரோட் டில் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே போல்ஷ் வெக்படையினர், அரசாங்கத்தைக் கைபற்றிக் கொண்டனர். தற்காலீக அரசாங்கத்தின் பிரதம மந்திரி கெரென்ஸ்கி பெண் வேடத்தில் தப்பியோடி னார். சோவியத் அரசாங்கம் நிறுவப்பட்டது. இல்லை ...புதுவாழ்வுக்கு கால்கோல் விழா செய்யப்பட்டது. அந்தவெற்றிச் சிரிப்புதான் இன்றைய மேதினத்திலே எதிரொலிக்கிறது அந்த எதிரொலி திராவிடத்தில் இன ஒலியை-சுயமரியாதை ஒலியை எழுப்புமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/15&oldid=1701807" இலிருந்து மீள்விக்கப்பட்டது